இன்டர்வியூவில் ஹெச்.ஆரிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள்|Don’t Just Answer! Ask These HR Questions in Interviews

Spread the love

இன்டர்வியூவிற்கு செல்கிறீர்கள்… “என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?’, ‘ஏன் முந்தைய நிறுவனத்தை விட்டு வந்தீர்கள்?’, ‘ஏன் எங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’ – இப்படி வழக்கமாக ஹெச்.ஆர்கள் நம்மை கேள்விக்கணைகளால் துளைப்பார்கள்.

ஹெச்.ஆர் கேட்ட கேள்விகள் போக, நாமும் அவரிடம் இன்டர்வியூவில் சில கேள்விகளைக் கேட்க வேண்டுமாம்.

‘இது என்ன புதுசா இருக்கே?’ டோனில் இந்த விஷயம் இருக்கிறது. அப்படி ஹெச்.ஆரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று பார்ப்போம்…

நேர்காணல்

நேர்காணல்

> ஏன் இந்த இடம் காலியானது?

> இந்த நிறுவனத்தின் கலாசாரம் என்ன?

> இந்த நிறுவனம், நான் வேலை செய்யப்போகும் துறை மற்றும் டீமின் அளவு என்ன?

> சம்பளத்தைத் தாண்டி, என்னென்ன பலன்கள் கிடைக்கும்? புரோமோஷன்கள் எப்படி நடக்கும்? போனஸ் பற்றி சொல்லுங்கள்.

> நான் யாரிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *