இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!

dinamani2F2025 07 262Fq9qah2j92Fde
Spread the love

அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் ஆர்ஜென்டீன வீரர் ரோட்ரிகோ டீ பால் இணைந்துள்ளார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ரோட்ரிகோ டீ பால் (வயது 31) மிட்ஃபீல்டராக விளையாடி வருகிறார்.

கடைசியாக அத்லெடிகோ மாட்ரிட் அணியில் விளையாடிவந்த இவர் தற்போது இன்டர் மியாமி அணியில் இணைந்துள்ளார்.

De Paul with Messi
மெஸ்ஸியுடன் டீ பால்.

ஏற்கெனவே, இந்த அணியில் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த மெஸ்ஸி விளையாடி வருகிறார். இவர்கள் இருவர் சிறந்த நண்பர்கள்.

களத்தில் மெஸ்ஸிக்கு எதாவது பிரச்னை என்றால் முதல் ஆளாக வருவதில் ரோட்ரிகோ டீ பால் புகழ்ப்பெற்றவர்.

கால்பந்து ரசிகர்கள் இவரை மெஸ்ஸியின் பாதுகாவலன் என்றெல்லாம் அழைப்பது குறிப்பிடத்தக்கது.

அத்லெடிகோ மாட்ரிட் அணியில் இருந்து 6 மாதம் கடனில் இன்டர் மியாமிக்காக விளையாட வந்திருக்கிறார்.

மொத்தமாக 400க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி 57 கோல்கள், 13,108 முறை பந்தினை வெற்றிகரமாக பாஸ் செய்து அசத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *