“இன்னைக்கும் நீங்க அவர் ரசிகர் வீட்டுக்கு போனா…” – எம்.ஜி.ஆர் குறித்து நடிகர் கார்த்தி |“You went to that fan’s house today…” – Actor Karthi on MGR

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தனது 26வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். “சூது கவ்வும், காதலும் கடந்து போகும்” உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

வா வாத்தியார் பட நிகழ்ச்சி

வா வாத்தியார் பட நிகழ்ச்சி

இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் கார்த்தி,

“இந்தப் படம் நடிக்க ஒப்புக்கொண்டபிறகு கேரக்டருக்குள்ள போலாம்னு முடிவு பண்ணியாச்சு. உள்ள போனா, எம்.ஜி.ஆர் ஒரு பெரிய கடல் மாதிரி அவ்ளோ விஷயம் கிடைக்கிது. அவரைப்பற்றி பேசினாலே புல்லரிக்குது. இன்னைக்கும் நீங்க அவர் ரசிகர்கள் வீட்டுக்குச் சென்றால், அவருடைய புகைப்படத்தை பார்க்க முடியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *