இன்றுமுதல் ஒளிபரப்பாகிறது எதிர்நீச்சல் -2 தொடர்!

Dinamani2f2024 12 232f6ma6ve0l2fpriyadharshinikishoreneelakndn17347031563527268191682140436729037.jpeg
Spread the love

எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ளது. இன்று இரவு 9.30 மணிக்கு இரண்டாம் பாகத்தின் முதல் எபிஸோட் ஒளிபரப்பாகிறது.

எதிர்நீச்சல் முதல் பாகம் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென முடிவுக்கு வந்தது. திருச்செல்வம் இயக்கும் தொடர் நீண்ட காலம் ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நல்ல வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டது.

இதனிடையே எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தின் மீதான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியது.

எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் முற்றிலும் வேறு பாத்திரங்களுடன் அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முன்பு இருந்த பாத்திரங்களை வைத்தே கதை எழுதியுள்ளதாக இயக்குநர் திருச்செல்வம் அறிவித்திருந்தார்.

எனினும், நாயகி மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி வெங்கட்ராமன் நடிக்கவுள்ளார். இவர் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நாயகியாக நடித்திருந்தார்.

நடிகை மதுமிதா, அய்யனார் துணை என்ற புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால், எதிர்நீச்சல் 2ஆம் பாகத்தில் நடிக்கவில்லை.

இவரைத் தவிர, எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்தில் இருந்த கனிகா, திவ்யதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, கமலேஷ், விபு ராமன் ஆகியோர் 2ஆம் பாகத்திலும் தொடர்கின்றனர்.

எதிர்நீச்சல் -2 தொடரின் முன்னோட்ட விடியோக்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்றுமுதல் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *