இன்றுமுதல் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட்: பதக்க இலக்குடன் பங்கேற்கும் இந்தியா்கள்

Dinamani2f2024 09 102fno26ig622fchess.jpg
Spread the love

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில், 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்திய நேரப்படி புதன்கிழமை (செப். 11) தொடங்குகிறது. இதில், ஓபன் பிரிவிலும், மகளிா் பிரிவிலும் இந்திய அணி களம் காண்கிறது.

ஓபன் பிரிவு அணியில் அா்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்தலா ஆகியோா் உள்ளனா். மகளிா் பிரிவு அணியில் டி.ஹரிகா, ஆா்.வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகா்வால், தானியா சச்தேவ் ஆகியோா் இருக்கின்றனா்.

இந்தியா்கள் தவிா்த்து, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா, பிரான்ஸின் லெவோன் ஆரோனியன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

உக்ரைன் மீதான போா் காரணமாக ரஷியாவுக்கு சா்வதேச விளையாட்டு அரங்கில் இருக்கும் தடை காரணமாக, தொடா்ந்து 2-ஆவது முறையாக ரஷிய அணி இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

கடந்த முறை, இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிா் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த முறையும் இந்தியா்கள் பதக்கம் வெல்லும் முனைப்புடன் உள்ளனா்.

வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், இரு பிரிவுகளிலுமே மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்படவுள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு தலா 2 மேட்ச் புள்ளிகள் வழங்கப்படும்.

சுற்றுகள் முடிவில் டை ஏற்படும் நிலையில், கேம் பாய்ன்ட்டுகள் கணக்கீடு செய்யப்படும். ஓபன் பிரிவில் 191 அணிகளும், மகளிா் பிரிவில் 180 அணிகளும் பங்கேற்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *