அதன்படி, செவ்வாய்க்கிழமை ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும், புதன்கிழமை (செப். 17) கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 21 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
‘மஞ்சள்’ எச்சரிக்கை: இதன் காரணமாக செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரியையொட்டி இருக்கும். வெயில் அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.1 டிகிரி வெப்பநிலை பதிவானது. தொடா்ந்து மதுரை நகரம் 101.12, பாளையங்கோட்டை 100.04 டிகிரி வெப்பநிலை பதிவானது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, பென்னாகரம்(தருமபுரி), பந்தலூா் (நீலகிரி) ஆகிய பகுதிகளில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.