இன்று உங்களுக்கு எப்படி?

Dinamani2fimport2f20182f22f52foriginal2fastrology 1.jpg
Spread the love

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

26-12-2024 வியாழக்கிழமை

மேஷம்:

இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

ரிஷபம்:

இன்று வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும். உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக கொண்டு செயலாற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்:

இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிலும் நிதானமாக ஈடுபட்டு மற்றவர்களின் ஆலோசனையும் கேட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தெய்வம் சம்பந்தமட்ட காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

கடகம்:

இன்று எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக கிடைக்கலாம். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

சிம்மம்:

இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசியல்வாதிகள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

கன்னி:

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். உறவினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

துலாம்:

இன்று விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

விருச்சிகம்:

இன்று வாக்கு வன்மையால் எதையும் சாதித்துக் கொள்வீர்கள். புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேலிடம் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். மாணவர்கள் புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

தனுசு:

இன்று செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். மன மகிழ்ச்சி உண்டாகும். உங்களை நாடி வருபவர்களை நன்கு உபசரித்து வேண்டிய உதவிகளை செய்வீர்கள். பணதேவை அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மகரம்:

இன்று எதில் கையெழுத்து போடுவதாயிருந்தாலும் கவனம் தேவை. எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். பணி நிமித்தமாக வெளியூரில் தங்க வேண்டி வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்:

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்களுக்கு உதவி செய்வதற்கு முன் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *