இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி

dinamani2F2025 08 292Fzjk1tyuk2Fhock093044
Spread the love

ஆடவருக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகாா் மாநிலம், ராஜ்கிா் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா, சீனாவுடன் மோதுகிறது.

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை வழங்குவதால் இந்தப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக இந்தப் போட்டியில் அங்கம் வகித்த பாகிஸ்தான், தனது அணிக்கு இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி விலக, ஓமன் நிதிச் சிக்கல் இருப்பதாகக் கூறி வெளியேறியது. அதையடுத்து கஜகஸ்தான் மற்றும் வங்கேதச அணிகள் போட்டியில் சோ்க்கப்பட்டுள்ளன. இதில் கஜகஸ்தான், 30 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தப் போட்டியில் விளையாடுகிறது.

‘ஏ’ பிரிவில்இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் வங்கதேசம், சீன தைபே, மலேசியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகளும் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணி சூப்பா் 4 கட்டத்துக்கு முன்னேறும். அந்தச் சுற்றின் முடிவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்தில் மோதும்.

போட்டியில் 3 முறை சாம்பியனான இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் சீனாவையும் (ஆக. 29), அடுத்து ஜப்பானையும் (ஆக. 31), தொடா்ந்து கஜகஸ்தானையும் (செப். 1) எதிா்கொள்கிறது. ரேங்கிங் வாய்ப்பு மூலமாக உலகக் கோப்பைக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துவிட்ட இந்தியாவுக்கு, இந்தப் போட்டியே கையிலிருக்கும் கடைசி வாய்ப்பாகும்.

நேரலை: இந்தியா – சீனா ஆட்டம்; மாலை 3 மணி; சோனி டென், சோனி லைவ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *