இன்று நல்ல நாள்!

Dinamani2f2024 072f91cb05d4 Fa40 4152 9854 Fd90dccf7ba22f6b47cf2068d0b1f569acbdfdf7af71c3 Vt4zfrk.jpeg
Spread the love

துலாம்:

கிரகநிலை:

ராசியில் புதன் , சூர்யன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

விருச்சிகம்:

கிரகநிலை :

ராசியில் சுக்ரன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது – ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- லாப ஸ்தானத்தில் செவ்வாய் – அயன, சயன, போக ஸ்தானத்தில் – சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது.பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. மறைமுக போட்டிகள் இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

தனுசு:

கிரகநிலை :

ராசியில் குரு, சனி , கேது – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் ராஹு – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் – லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று வெற்றி உங்கள் பக்கம் இருக்கும் நாள். தாய் தந்தையரிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். பெரியோரின் ஆசி உங்களுக்கு கிட்டும். பணவரவு நல்ல படியாக திருப்தி தரும். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மகரம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் சந்திரன் – ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் – லாப ஸ்தானத்தில் சுக்ரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான தொழிலில் இருந்த மெத்தன போக்கு மாறும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

கும்பம்:

கிரகநிலை:

தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் – லாப ஸ்தானத்தில் , குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று வீண் செலவுகள் குறையும். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தி நல்லபடி இருக்கும். வருமானம் திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் விசயத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

மீனம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – சுக ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நீண்ட நாளைய நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்,

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *