தென்கொரியாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 3வது ராணுவ உளவுச் செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள வாண்டென்பர்க் விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ராக்கெட்டின் மூலம் தென்கொரியாவின் 3 வது ராணுவச் செயற்கைக்கோள் அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை காலை 3.34 மணிக்கு செலுத்தப்படவுள்ளது.
இந்த செயற்கைக்கோளின் மூலம் வடகொரியாவின் நடவடிக்கைகளை உளவு பார்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.
இந்த முயற்சி வெற்றியடைந்துவிட்டால் இது தென் கொரியாவின் மூன்றாவது ராணுவ செயற்கைக்கோளாகும். வடகொரியாவை கண்காணிக்க 2025 ஆம் ஆண்டின் முடிவிற்குள் சிறியது முதல் பெரியது வரையிலான ஐந்து செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ தென்கொரியா திட்டமிட்டுள்ளது.