இன்றைய தினப்பலன்கள்!

Dinamani2fimport2f20172f112f172foriginal2frasi Palangal.jpg
Spread the love

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

27-11-2024

புதன் கிழமை

மேஷம்:

இன்று தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனோதிடம் உண்டாகும். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ரிஷபம்:

இன்று திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மிதுனம்:

இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கடகம்:

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்:

இன்று நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கன்னி:

இன்று எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

துலாம்:

இன்று திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

விருச்சிகம்:

இன்று போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

தனுசு:

இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

மகரம்:

இன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்:

இன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். எதிர்ப்புகள் அகலும். ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மீனம்:

இன்று உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 6

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *