இன்றைய தினப்பலன்கள்!

Dinamani2f2024 12 152fbxp2ab842f202409293232736.jpg
Spread the love

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

சனிக்கிழமை

ஏப்ரல் 05

மேஷம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராஹூ – ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது – தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 7.50 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பொருளாதார நிலையில் எந்த வித மாற்றமும் இருக்காது. திருமண முயற்சிகளில் ஈடுபட்டால் கைகூடும். வரும் வரன்களை ஏற்றுக் கொண்டால் எதிர்காலம் திட்டமிட்டபடி நடந்தேறும். ஒரு உற்சாகமான நாள். தேவையானவற்றை சுலபமாக வாங்கி விடுவீர்கள். சிலருக்கு அறிவுரை வழங்கும் போது கவனமுடன் இருக்கவும். ஏனெனில் பிரச்சினைகள் உங்களுக்கு வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

ரிஷபம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் – ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 7.50 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று லாபம் பெருகும். குடும்பத்தில் அனைவரிடமும் அன்பாக பழகுவீர்கள். தாய் தந்தையரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். குழந்தைகளின் கல்வி விஷயமொன்று கவலையளிக்கும். சில விசயங்களை அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில் ராஹூ – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் குரு, சனி , கேது – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 7.50 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். குடும்பத்தில் இருக்கும் மூத்தோர் கூட உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிதல் உண்டு

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கடகம்:

கிரகநிலை:

தைரிய, வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் – ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி , கேது – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 7.50 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். . தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். அதன் காரணமாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

சிம்மம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் – தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – சுக ஸ்தானத்தில் சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி , கேது – ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 7.50 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உற்சாகமான நாள். ஆர்டர்கள் வருவதில் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு வேலைக்குச் செல்லும் வேலையில் திருப்திகரமான சூழ்நிலை நிலவும். பெண்கள் சிலர் சுற்றுலா சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சுக்ரன் – சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 7.50 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பிரச்சினைகள் அற்ற நாள். பெண்களுக்கு மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். மாணவமணிகள் வெளிநாடு சென்று மேற்கல்வி பயில வேண்டுமென்று முயற்சி செய்து வருபவர்களுக்கு அதில் சிறுசிறு தடங்கல்கள் வரக் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

துலாம்:

கிரகநிலை:

ராசியில் புதன்(வ) , சூர்யன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது – சுக ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 7.50 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று புதிய மாற்றம் உருவாகும் நாள். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். மனதிற்கு நிம்மதிக்கு குறைவிருக்காது. திருமண வயதிலுள்ளவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வரன்கள் கிடைத்து திருமண ஏற்பாடுகள் வெகுவிரைவில் நடந்தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது – தைரிய ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- லாப ஸ்தானத்தில் செவ்வாய் – அயன, சயன, போக ஸ்தானத்தில் – சூர்யன், புதன்(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 7.50 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலில் நீங்கல் கொடிகட்டிப் பறக்கப் போகிறீர்கள். தொழிலாளர்களும் உங்களுக்கு சாதகமாகவே இருப்பார்கள். உற்சாகமானதாக இருக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு:

கிரகநிலை:

ராசியில் குரு, சனி , கேது – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் ராஹு – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் – லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காரிய தடைகள் வரலாம். சூரிய சுக்கிரன் சஞ்சாரம் வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்:

கிரகநிலை:

ராசியில் சந்திரன் – ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – லாப ஸ்தானத்தில் சுக்ரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 7.50 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உதவிகள் பெறும் நாள். அனைவரும் ஒற்றுமையாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை காணுவீர்கள். விருப்பங்களும் நிறைவேறும். மனதில் நிம்மதி குடி கொண்டிருக்கும். உத்தியோகத்தில் சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். உடன்பணிபுரிபவர்களுக்கு ஒத்துழைப்பு நீங்கள் கொடுப்பீர்கள். சிலரது மறைமுக சூழ்ச்சி உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் – லாப ஸ்தானத்தில் , குரு, சனி , கேது – அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 7.50 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சிறப்பான நாள். வினோதங்களை கையாளுவீர்கள். வியாபாரத்தில் வெற்றியுடன் செயல்படுவீர்கள். திட்டங்கள் தீட்டி வெற்றி காணுவீர்கள். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள். அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். வெகு காலமாக வீட்டிற்கு வராத உறவினர்கள் உங்கள் இல்லத்திற்கு வருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மீனம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது – லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 7.50 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழிலில் விற்பனை அதிகரிக்கும். ஏற்றுமதி – இறக்குமதி தொழில் செய்பவருக்கு அனுகூலமான வாரமாகவே இருக்கும். வெற்றிகள் ஏற்படக் கூடிய நாள். துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *