இபிஎஸ்ஸை சந்தித்தது ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

Spread the love

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன் , மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் ஆகியோர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார்கள்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ”மரியாதை நிமித்தமாகவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன், அரசியல் நிலவரம் குறித்து எதுவும் பேசவில்லை” என்றார்.

அதிமுகவிலிருந்து விலகி சென்றவர்களை விரைவில் சந்திப்பேன் என நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”தேர்தலுக்கு இன்னும் 6 மாதம் இருக்கு, நேரம் வரும்போது கூறுகிறேன்.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை, திமுகவை பொறுத்த வரையில் 4 ஆண்டுகால கட்சியில் எதையும் செய்யவில்லை, உங்களுடன் முதல்வர் திட்டம் மூலம் அதிகாரிகள்தான் வீடுவீடாக சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.

அதனால் மக்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டதா? என்று தெரியவில்லை. தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை தங்களோட ஒப்பிட்டு பேசக்கூடாது, நாங்கள் மிகப்பெரிய அளவிலான தேசிய கட்சி. கூட்டம் வருவதைப் பொறுத்து முடிவு செய்யக்கூடாது, அவர் திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி என்பதை எப்படி ஏற்க முடியும்.

வருகின்ற அக்டோபர் 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும், மதுரையிலிருந்து தொடங்கும் சுற்றுப்பயணத்தில் அனைத்துக் கட்சி கூட்டணி தலைவர்களும் பங்கேற்பார்கள்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்கு!

BJP state president Nainar Nagendran has given an explanation regarding his meeting with AIADMK general secretary Edappadi Palaniswami.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *