“Zee5′ தயாரிப்பில் வெளியாகும் புதிய வெப் சீரிஸான ’ஹார்ட்டிலே பேட்டரி’-யின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, Zee5 கெளஷிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். ‘OTT தளங்கள் ஏன் படங்களை வாங்குவதில்லை?’ என்ற விவாதங்கள் ஆர்.கே.செல்வமணி, Zee5 கெளஷிக் இடையே நடந்தது.

இதுகுறித்து ஆர்.கே.செல்வமணி, “இந்த வெப்சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் ஓடிடி தளம் என்பதால் இந்த மேடையில் மற்றொரு கோரிக்கையை முன்வைக்கிறேன். கடந்த காலங்களில் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகர்களின் ஊதியத்தை ஓடிடி தளங்கள் 40 கோடி ரூபாய் வரை உயர்த்திவிட்டன.