இம்ரான் கானின் இடைக்கால ஜாமீன் ஜன.7 வரை நீட்டிப்பு!

Dinamani2f2024 10 032fx18zeqjd2fani 20241003005252.jpg
Spread the love

இரண்டாவது தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபியின் இடைக்கால ஜாமீனை ஜனவரி 7 வரை நீட்டித்து பாகிஸ்தான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கான், அவரது பதவிக் காலத்தில் வெளிநாட்டு தலைவா்கள் வழங்கிய விலை உயா்ந்த பரிசுப் பொருள்களை மறைத்து வைத்ததாகவும், அரசுக் கருவூலமான தோஷகானாவிடமிருந்து பரிசுப் பொருள்களை குறைந்த விலையில் வாங்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்றதாகவும் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் உடனடியாக கைது செய்யப்பட்டு, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாவட்ட செசன்சு கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இம்ரான்கானை உடனடியாக விடுவிக்குமாறு சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், இம்ரான்கான் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் அவரை சிறையிலிருந்து விடுவிக்கவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்குரைஞர் வாதத்தை முன்வைத்த நிலையில், இம்ரான் கான் மற்றும் பீபியின் இடைக்கால ஜாமீனை அடுத்தாண்டு ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டித்து விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *