பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (27) இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
மும்பை-கோவா சென்ற சொகுசுக்கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
நாயகராக அறிமுகமாகுவர் என நினைத்திருந்த வேளையில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக கௌரி கான் தயாரிப்பில் ஆர்யன் கான் புதிய இணையத் தொடரை இயக்கியுள்ளார்.
இந்தத் தொடர் நெட்பிளிக்ஸில் 2025இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
அதில், “புதிய கதை சொல்லல்முறை. கட்டுப்படுத்தப்பட்ட ஒழுங்கின்மை, தைரியமான காட்சிகள், அதிகமான நகைச்சுவைகளும் உணர்ச்சிகளும் கொண்டது. மக்களை மகிழ்வித்து மகிழ் ஆர்யன் கான். சினிமா போல மிகச் சிறந்த வியாபாரம் எதுவும் இல்லை” என்றார்.
இந்தப் படத்துடன் ரெட் சில்லிஸ் – நெட்பிளிக்ஸ் உடன் 6ஆவது முறையாக இணைந்துள்ளது. இதற்கு முன்பாக டார்லிங்ஸ், பக்ஷக், கிளாஸ் ஆஃப் 83, பேட்டல், பார்ட் ஆஃப் பிளட் ஆகிய படங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.
இதற்கு முன்பாக ஆர்யன் கானின் சகோதரி சுஹானா கான் ஜோயா அக்தர் இயக்கிய தி ஆர்சிஸ் எனும் படத்தின் மூலம் நெட்பிளிக்ஸில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
Witness Bollywood like never before… on Netflix!
Presenting Aryan Khan’s directorial debut in an all-new series, coming soon!@gaurikhan @iamsrk #AryanKhan @RedChilliesEnt @NetflixIndia pic.twitter.com/UMGTb5FVGI
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) November 19, 2024