கடுஞ்சினம் கொண்டவராக அருளைத் துரத்துமிடம், அங்கு ஏற்படும் விபத்துகளால் மெய்யுணரும் இடம் எனக் “க்ரே டு வைட்’ கதாபாத்திரத்தைத் தனது வழக்கமான நடிப்பு மற்றும் உடல்மொழியால் துடுப்பு போட்டுக் கரை சேர்கிறார் சரத்குமார்.
குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், அதனால் உண்டாகும் ஒருவிதமான பயம், அப்படியான சமயத்தில் மலரும் காதல், அந்தக் காதல் கொண்டு வரும் இடர்கள் என அருள் கதாபாத்திரத்தைத் தத்தளித்து கரை சேர்க்கிறார் இந்திரஜித் ஜெகஜித்.
இந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக வருவதால், மற்ற கதாபாத்திரங்களுக்கு வெறுமென அட்டெண்டென்ஸ் போடும் வேலை மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நடு ‘ஆழி’க்குள் மிதக்கும் ஒரு விசை படகு, அதற்குள் நிகழும் சண்டைக் காட்சிகள், அதற்கேற்ப அமைத்திருக்கும் தேர்ந்த ஒளியமைப்பு எனக் கவனத்தைப் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் என். நாயர்.
ஒரு விசை கப்பலுக்குள்ளாகவே சுற்றிச் சூழலும் காட்சிகளைப் படத்தொகுப்பாளர் கே. ஸ்ரீனிவாஸ், பரபரப்பின்றி கத்தரித்த விதம், குறுகிய ‘ரன் டைம்’ படமாக இருந்தாலும் நம்மை ‘டயர்டு’ சுழலுக்குள் சிக்க வைக்கிறது.