இரக்கம், எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் போப் பிரான்சிஸ்! – பிரதமர் மோடி இரங்கல்

Dinamani2f2025 04 212f37npez0h2fpti04212025000139b.jpg
Spread the love

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் இன்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 88. இந்த துயரச் செய்தி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில், போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், போப் பிரான்சிஸ் மறைவால் மிகுந்த வேதனையுற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: துயரமான இத்தருணத்தில் உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்க சமூகத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரக்கம், எளிமை, துணிவுடன் ஆன்மிக பாதையில் சென்ற விதம் ஆகிய குணநலன்களின் அடையாளமாக கலங்கரை விளக்கமாக உலகெங்கிலுமுள்ள லட்சக்கணக்கான மக்களால் போப் பிரான்சிஸ் என்றென்றும் நினைவில் வைத்து போற்றப்படுவார்.

அவர் ஏழை மற்றும் நலிவுற்ற மக்களுக்காக சேவையாற்றியவர். இன்னல்களால் துயருற்றவர்களுக்கு நம்பிக்கை ஒளியை ஏற்றிய பெருமகனார் என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *