இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த ராம் சரண் – உபாசனா தம்பதி |Ram Charan and Upasana have become parents to twins.

Spread the love

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் சிரஞ்சீவி, “மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் நிறைந்த இதயத்துடன், ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடெலா தம்பதி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓர் ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும். குழந்தையர் இருவரும் ஆரோக்கியமாகவும், தாயாரும் நலமுடனும் உள்ளனர்.

இந்தச் சிறிய உயிர்களை நம் குடும்பத்தில் வரவேற்பது, பாட்டி-தாத்தாக்களாக எங்களுக்குத் தூய்மையான மகிழ்ச்சியும் தெய்வீக ஆசீர்வாதமுமாகும்.

அனைவரின் பிரார்த்தனைகள், அன்பு, ஆசீர்வாதங்கள் மற்றும் நல்ல வாழ்த்துகளுக்கு மனமார நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *