‘இரண்டு ஆண்டுகளில் இப்படி நாங்கள் தோற்றதே இல்லை!’ – ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் |“Such a Defeat After Two Years!India Batting Coach Reacts Before Zimbabwe Match

Spread the love

அபிஷேக் சர்மா குறித்த கேள்விக்கு, “ஒரு வீரரைப் பற்றி மட்டும் அதிகம் சிந்திப்பது எனக்குப் பிடிக்காது, அது அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். அவர் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். விரைவில் அவர் ஒரு பெரிய ஸ்கோரை எடுப்பார்.”

சஞ்சு சாம்சன் & ரிங்கு சிங் குறித்து பேசிய அவர், “சஞ்சு எப்போதும் போலவே இயல்பாக விளையாடுவார். அவரை அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ரிங்கு சிங்கும் மீண்டும் அணியில் இணைவார் என நம்புகிறோம்.”

பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

குல்தீப் யாதவ் குறித்த கேள்விக்கு, “டி20 போட்டிகளில் 8-வது வீரர் வரை பேட்டிங் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அனைவரும் சிறந்த வீரர்கள்தான், ஆனால் 11 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

இந்தியாவில் உலகக் கோப்பை நடப்பது ஓர் அழுத்தம் தான். கவலை மற்றும் பதற்றத்தை கையாள்வது வாழ்க்கையின் ஒரு பகுதி. அதை நேர்மறையாக அணுக வேண்டும். எங்கள் விளையாடும் முறையை (Template) திடீரென மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

ஒருமுறை நல்ல தொடக்கம் கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். நாளை முதல் மீண்டும் ஒரு நல்ல உத்வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு வெற்றியைத் தேடித்தந்த அதே பாணியில் தான் தொடர்ந்து விளையாடுவோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *