இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

dinamani2F2025 07 152F4slzmtq02FRain night edi
Spread the love

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Rain in 9 districts of tamilnadu for the next 3 hours

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *