நாமக்கல்லில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் அவர்கள் கூட்டி வந்தது என்று அவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர் வந்த 2 ஆம்புலன்ஸ், எப்படி உள்ளே வந்தது? சம்பவத்துக்கு முன்னர் பேசிக்கொண்டிருக்கும்போது அந்த ஆம்புலன்ஸ் எப்படி வந்தது என்பதுதான் எங்கள் கேள்வி.
அவர் பேசத் தொடங்கியவுடன் லைட் அணைகிறது, போலீஸ் தடியடி நடத்துகின்றனர், செருப்பு வீசுகிறார்கள், ஆம்புலன்ஸ் வருகிறது – இவையெல்லாம் பார்த்தால் சந்தேகம் இருப்பதாக சமூக ஊடகங்களில் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்கின்றனர், 40 ஆம்புலன்ஸ்களை ஸ்டிக்கர் ஒட்டி தயாராக வைத்திருக்கின்றனர், இரவோடு இரவாக முதல்வர் வருகிறார், நிவாரணத் தொகை அறிவிப்பு, தனிநபர் ஆணையம் அறிவிப்பு – இவற்றையெல்லாம் பெருமையாகச் சொல்கின்றனர். இதற்குத்தான் அரசாங்கம் இருக்கிறது; முதல்வர் இருக்கிறார்.