புது தில்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வியின் இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் இன்று நாடாளுமன்றத்தை உலுக்கியிருக்கும் நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யின் இருக்கையில் பணம் இருந்தது குறித்து விசாரணை நடத்துமாறு மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், எப்போதும் மாநிலங்களவைக்கு வரும் போது நான் என் கையில் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டைத்தான் வைத்திருப்பேன் என்று அபிஷேக் சிங்வி பதிலளித்துள்ளார்.