இருமல் மருந்து உயிரிழப்பு: தனியார் ஆலையின் உரிமையாளர் ரங்கநாதன் கைது | coldrif cough syrup manufacturer arrested by madhya pradesh police

Spread the love

சென்னை: மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இரு​மல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் அருகே சுங்குவார்ச்சத்திரத்தில் அவரது மருந்து ஆலை உள்ளது. தமிழக போலீஸாரின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில போலீஸார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். தற்போது, ரங்கநாதனிடம் மத்தியப் பிரதேச போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, தமிழக அரசு கடந்த வாரம் முதலே இந்த மருந்து நிறு​வனத்​தின் உற்​பத்​தியை உடனடி​யாக நிறுத்த உத்​தர​விட்​டதுடன், ‘கோல்ட்​ரிப்’ இரு​மல் மருந்தை தமிழகம் முழு​வதும் விற்​பனை செய்​யத் தடை விதித்​து, மருந்து இருப்​பு​களை அகற்​ற​வும் உத்தரவிட்டது. மருந்​துக் கட்​டுப்​பாட்​டுத் துறை அதி​காரி​கள் விளக்​கம் கேட்டு அந்​நிறு​வனத்​தில் நோட்​டீஸ் ஒட்​டினர்.

இதனிடையே, மத்​தி​யப் பிரதேச சிறப்​புப் புல​னாய்​வுக் குழு​வினர் நேற்று சுங்​கு​வார்​சத்​திரம் வந்​தனர். மருந்​துக் கட்​டுப்​பாட்​டுத் துறை அதி​காரி​களை​யும், உள்​ளூர் காவலர்​களை​யும் அவர்​கள் தொடர்பு கொண்​டனர். இதன் தொடர்ச்சியாகவே, ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னணி என்ன? – மத்​திய பிரதேசம் சிந்த்​வாரா மாவட்​டத்​தில் கடந்த ஆகஸ்ட் மாதத்​தில் கோல்ட்​ரிப் இரு​மல் மருந்து காரண​மாக முதல் குழந்தை உயி​ரிழந்​தது. ஆனால், அடுத்தடுத்த நாட்​களில் மேலும் சில குழந்​தைகள் சிறுநீரக செயலிழப்​பால் அடுத்​தடுத்து உயி​ரிழந்தன. மொத்தம் 20 குழந்தைகள் அங்கு உயி​ரிழந்தன.

சளி, இரு​மல், லேசான காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்ட குழந்​தைகளுக்கு மருத்​து​வர்​கள் இரு​மல் சிரப் உள்​ளிட்ட வழக்​க​மான மருந்​துகளை பரிந்​துரைத்துள்​ளனர். ஆனால், அந்த மருந்தை எடுத்​துக்​கொண்ட பின்பு சில நாட்​களுக்​குள் அந்த குழந்​தைகளுக்கு சிறுநீர் வெளி​யேறு​வது குறைந்​தது. இதையடுத்​து, அவர்​களுக்கு சிறுநீரக தொற்று இருப்​பது கண்​டறியப்​பட்​டது. டயாலிசிஸ் கிகிச்சை தொடங்​கிய சில நாட்​களுக்​குள் குழந்​தைகள் அடுத்​தடுத்து இறந்​தனர்.

உயி​ரிழந்த குழந்​தைகளில் சிலர் மகா​ராஷ்டி​ரா, ராஜஸ்​தான் மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​களும் அடங்​கு​வர். பின்​னர் நடத்​தப்​பட்ட உடற்​கூ​ராய்​வில், குழந்​தைகளின் சிறுநீரகங்​களில் டைஎ​திலீன் கிளை​கோல் இருப்​பது கண்​டறியப்​பட்​டது. இது, விஷத்​துடன் தொடர்​புடைய ஒரு வகை நச்சு ரசாயனமாகும். விசா​ரணை​யில் அந்த குழந்​தைகளுக்கு கோல்ட்​ரிப் மற்​றும் நெக்​ஸ்ட்​ரோ-டிஎஸ் சிரப்​பு​கள் வழங்​கப்​பட்​டது தெரிய​வந்​தது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்த இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழ்​நாட்​டின் காஞ்​சிபுரத்​தில் உள்ள ஸ்ரேசன் பார்​மாசூட்​டிகல்ஸ் தயாரித்த கோல்ட்​ரிப் என்ற இரு​மல் சிரப்பை அக்​டோபர் 2-ம் தேதி, தமிழ்​நாடு மருந்து கட்​டுப்​பாட்டு அதி​காரி​கள் பரிசோ​தித்​த​தில் அந்த மாதிரி​யில் கலப்​படம் இருப்​ப​தாக அறி​வித்​தனர். அதன்பின், அந்த ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *