குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் இன்று உரையாற்றினார். அதில், காங்கிரஸ் கட்சிக்கு குடும்ப நலனே முக்கியம் என விமர்சித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சி சுயநலமாகச் செயல்படுவதாகவும், மற்றவர்களை பலவீனப்படுத்துவதால் கூட்டணி கட்சியினரே இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளதாவது,
வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார சமத்துவமின்மை, மந்தநிலை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தனியார் முதலீடு வீழ்ச்சி மற்றும் தோல்வியடைந்த ‘மேக் இன் இந்தியா’ பற்றிப் பேசுவதற்கு பதிலாக, காங்கிரஸை மட்டுமே பிரதமர் மோடி குறை கூறினார் .
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளுக்கான திட்டங்களைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, வரலாற்று உண்மைகளைத் திரித்து அவையை தவறாக வழிநடத்த முயன்றார்.