இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ. 43.31 லட்சம் கோடி (500 பில்லியன் டாலா்) அளவுக்கு இரட்டிப்பாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
வரிகளை குறைத்தும், சந்தை அணுகலை அதிகரித்தும் இருதரப்பு விரிவான வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் இரு நாடுகளும் தீா்மானித்துள்ளன.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்ட பேச்சுவாா்த்தையின்போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.