அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இரண்டு முறை தள்ளுபடி செய்துள்ளோம்.
இயற்கை சீற்றத்தில் எப்பொழுது எல்லாம் விவசாயிகள் பாதிக்கப்பட்டார்களோ, நேரடியாக சென்று விவசாயிகளை சந்தித்து வறட்சியிலும், வறட்சி நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக அரசுதான்.

முதலமைச்சருக்கு வேளாண் திட்டம் என்றால் தெரியாது. மூன்று வேளாண் சட்டம் என்னவென்று முதல்வர் சொல்லட்டும் பார்க்கலாம்.
நான் தமிழக விவசாயிகள் இங்கு பாதிக்கப்படுவதை மட்டும் தான் நான் சொல்ல முடியும். ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரச்னைகள் உள்ளது.
விவசாயத்தைப் பற்றி அக்கு வேறு, ஆணிவேராக தெரியும். கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறேன். அனுபவ ரீதியாகவே விவசாயத்தை பற்றி நிறைய தெரியும்.
யார் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்” என்றார்.
ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, “ஓபிஎஸ் விவகாரம் காலம் கடந்து முடிந்து விட்டது” என்றவர், தொடர்ந்து பேசுகையில்,
“எஸ்ஐஆர் பணி நடந்துவிட்டால் இறந்தவர்கள் பட்டியல், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டு விடும். இவை எல்லாம் இருந்தால் தான் இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர் பெற்று வந்து வாக்களிக்க வைப்பார்கள்.
அது திமுகவிற்கு கைவந்த கலை அதற்காக தான் எஸ்.ஐ.ஆர் வரக்கூடாது என்று திமுகவினர் துடிக்கிறார்கள். திமுக அரசு பி.எல்.ஓக்களை வைத்து முறைகேடுகள் செய்கிறது.
முறைகேடுகளும் களையப்பட வேண்டும் நேர்மையான முறையில், உண்மையான வாக்காளர் பட்டியல் வாக்காளர்கள் இடம்பெற வேண்டும்.” என்றார்.