இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா: தாயின் நெகிழ்ச்சி

Sdss Photoroom
Spread the love

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை…
..

தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்…
இது பாடல் வரிகள்…
இதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராக்கு.
இவரது செல்ல மகள் பாண்டிச்செல்வி கடந்த 2 ஆண்டுக்கு 8-ம் வகுப்பு படிக்கும் போது உடல்நலக்குறைவால் இறந்து போனார். அவரது இறப்பால் பெற்றோர் நிலைகுலைந்தனர். ராக்குவிற்கு தனது மகளின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது நினைவுகளோடே அவர் வாழ்ந்து வந்தார்.

இறந்து போன மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா

இறந்து போன பாண்டிச்செல்விக்கு அதிக மேக்கப்போடுவது மிகவும் ஆர்வமாக இருந்து உள்ளது. மேலும் விசேஷநிகழ்ச்சிகளுக்கு செல்வது மற்றும் பூப்புனித நீராட்டு விழாக்களில் பங்கேற்கும் போது தனது தாயிடம் தனக்கும் இதுபோன்று விசேஷ நிகழ்ச்சிகளை நாமும் பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்று கூறிவந்து உள்ளார். இதற்குள் அவரை காலம் காவு வாங்கி விட்டது.

எனினும் தனது மகள் பாண்டிசெல்வி மறைந்தாலும் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் அவருக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்த ராக்கு முடிவு செய்தார். இதற்கு முதலில் உறவினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்தாலும் அனைத்தையும் தாங்கி மகளுக்கு பூப்புனிதா நீராட்டு விழா நடத்துவதில் ராக்கு பிடிவாதமாக இருந்தார்.

மண்டபத்தில் ஏற்பாடு

இதைத்தொடர்ந்து மகள் மீது உள்ள ஆசையை உணர்ந்த உறவினர்களும் இந்த நிகழ்ச்சிக்கு சம்மதித்தனர். மேலும் உயிரோடு இருக்கும் மகளுக்கு எப்படி எல்லாம் பூப்புனித நீராட்டு விழா நடத்த வேண்டும் என்று ராக்கு நினைத்தாரோ அதேபோல் அனைத்து ஏற்பாடுகளும் செய்தார்.
அதன்படி இன்று (13-ந்தேதி) திருப்புவனத்தில் உள்ள மண்டபம் வாடகைக்கு எடுக்கப்பட்டு தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மண்டபம் முன்பு பூப்புனித நீராட்டு விழா பேனர் வைக்கப்பட்டது. மேலும் மேடையில் பாண்டிச்செல்வின் உருவத்துடன் கட்அவுட் வைக்கப்பட்டு அதற்கு மாலை ,நகைகள் அணிவிக்கப்பட்டன. பூப்புனித நீராட்டு விழாவில் நடைபெறும் சடங்குகள், சீர் வரிசை பொருட்கள் என அனைத்தும் வைக்கப்பட்டது.
இதில் ராக்குவின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஏராமாளனோர் கலந்து கொண்டனர். ராக்கு மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து அவர்கள் கண்கலங்கினர்.

உணர்ச்சி பூர்வமானது

இந்த பூப்புனித நீராட்டு விழா நடைபெறும் போது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.அவர்கள் நெகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். நெகில வைத்த தாயின் செயலை கண்டு அனைவரும் வியந்தனர்.

இதுகுறித்து ராக்கு கூறும்போது, என் மகள் என்னுடன் இல்லாதது கவலையாக உள்ளது. நான்பாட்டு பாடினால்தான் அவள் தனது முகத்தை என்னிடம் காட்டுவாள். அப்போது எனது மனதில் உள்ள கவலைகள், பாரங்கள் அனைத்தும் ஒன்றும் இல்லாமல் போகும்.

உள்ளத்தில் உள்ளாள்

இப்போது இந்த பூப்புனித நீராட்டு விழா நடத்தி இருப்பதற்கு எனது மகள் கொடுத்த தைரியத்திலும், துணிச்சலில்தான் நான் இறங்கி உள்ளேன். இது என்ன இப்படி இறந்தவளுக்கு செய்கிறாள் என்று சொல்வார்கள். என்னை பொறுத்த வரை எனது மகள் எனது உள்ளத்திலும் எனது பின்னாடியும் நின்றபடிதான் உள்ளாள். ஒவ்வொரு அடிக்கும் மகள் என்னுடன் நடந்து வந்து கொண்டுதான் இருக்கிறாள். ஒவ்
வொரு நாள் இரவிலும் எனது மகள் அப்படி இருப்பேன், இப்படி இருப்பேன் என்று கூறி அலங்காரம் செய்வதை பார்ப்பேன்.
இப்போது எனது மகள் இல்லாவிட்டாலும் எனது உள்ளத்தில் வாழந்து கொண்டுதான் இருக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாள், விசேஷ நாட்களில் அவள் உயிரோடு இருந்தால் என்ன செய்வேனோ அது அனைத்தையும் செய்து வருகிறேன். இப்படி செய்கிறாளே என்று எத்தனையோ பேர் சொன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன்,அச்சமும் படமாட்டேன். மகள் என்னுடன் உள்ளாள். யார் என்ன சொன்னாலும் நான் உனக்கு காவல் தெய்வமாக இருப்பேன். முன்னால் விட்டு பின்னால் பேசுபவர்களை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்வாள். நீ எதுவும் நி¬னைக்காமல் இரு என்று எனது உள்ளத்தில் கூறுவாள்.

பிடித்த பாடல்

அவளுக்கு “அன்னக்கிளி நீ சிரித்தாள்…நான் படித்தேன் ராகம்…” என்ற பாடல் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த பாடலை பூப்புனித நீராட்டு விழாவின் போது பாடினேன் என்று கனத்த இதயத்துடன் தெரிவித்தார்.

அன்னையர் தினம்

இது தொடர்பாக ராக்குவின் உறவினர்கள் கூறும்போது, இந்த பூப்புனித நீராட்டு விழாவை அன்னையர் தினமான நேற்று(12ந்தேதி) நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அன்று மண்டபம் கிடைக்காததால் இன்று நிகழ்ச்சி நடத்தினார். உண்மையான அன்னையர் தினம் ராக்குவுக்குதான். அவர்தான் சிறந்த அன்னை.

இறந்த மகளுக்கு இவ்வளவு விமரிசையாக பூப்புனித நீராட்டு விழா நடத்துவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் பல எதிர்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் சமாளித்தார்.
இறந்து போன பாண்டிச்செல்வி மிகவும் மேக்கப் அலங்காரம் செய்ய விரும்புவாள்.அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்காலத்தை பற்றி அதிகம் பேசுவாள். அவளது வாழ்க்கை இவ்வறு குறுகிய காலத்தில் முடியும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தீபாவளி அன்று மறைந்தாள். பாண்டிச்செல்வின் முகத்துடன் கட்அவுட் வைத்து பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. இந்த அளவுக்கு அவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்க வில்லை. தனக்கு பூப்புனித நீராட்டு விழா இப்படி எல்லாம் வைக்க வேண்டும் என்று அவள் ஏற்கனவே சொல்லி இருக்கிறாள். அவளது விருப்பப்படி நடத்தி உள்ளனர். முழுமையாக நிறைவேற்ற முடியாவிட்டாலும் செய்து உள்ளனர். மகள் உடனேதான் அவர்கள் வாழ்கிறார்கள், என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *