இறுதிப் போட்டிக்கு தேர்வான மே.இ.தீ. அணி..! இந்தியாவுடன் நாளை பலப்பரீட்சை!

Dinamani2f2025 03 152fwf8bjrho2fgmbdpm4beaaoiem.jpeg
Spread the love

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் மே.இ.தீ. அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் விளையாடியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 173/9 ரன்கள் எடுத்தது.

மேற்ந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியின் டினோ பெஸ்ட் 4 விக்கெட்டிகள் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மே.இ.தீ. அணி மோதவிருக்கிறது.

இந்தப் போட்டி நாளை (மார்ச்.16) இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

இந்திய அணிக்கு சச்சினும் மே.இ. தீ. அணிக்கு லாராவும் கேப்டனாக இருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *