இறுதியான திமுக -காங் கூட்டணி; காங்கிரஸுக்கு எத்தனை சீட் | DMK Congress Alliance Sealed

Spread the love

கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல். இந்த இழுபறி சில மணி நேரங்களுக்கு நீடித்து பரபரப்பை கூட்டியது.

நீண்ட காத்திருப்புக்கு பிறகு காங்கிரஸ் குழு அறிவாலயம் நோக்கி புறப்பட, இரவு 7:30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு போன்றோர் அறிவாலயம் வந்தனர். கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை போன்றோரும் வர முதல்வர் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

செல்வப்பெருந்தகை பேசுகையில், “28 சட்டமன்ற தொகுதிகளும் 1 மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த தாமதமும் இல்லை. கூட்டணி சரியான சமயத்தில் அமைந்திருக்கிறது. நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம்.’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *