இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்படும் அவலம்! | Sri Lanka Destroys Tamil Nadu Fishermen’s Boats

1381526
Spread the love

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை கடற்படையினரால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500 படகுகளை கைப்பற்றி 3,500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினாலும் , சிறை தண்டனை மற்றும் அபராதம் கட்டியப் பிறகும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகுகள் விடுவிக்கப்படவில்லை.

அந்தவகையில் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 200 படகுகளை நாட்டுடமையாக்கி உள்ளன.

இவ்வாறு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு அந்நாட்டு நீதிமன்றங்களினால் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் தலைமன்னார், காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகிய மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மயிலிட்டி துறைமுகத்தில் நிற்கும் 125 தமிழக மீன்பிடி படகுகளில் 40 படகுகளின் வழக்குகள் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தால் 7 படகுகள் ராமேசுவரம் மீனவர்களால் எடுத்து வரப்பட உள்ளது. மேலும் அரசுடமையாக்கப்பட்ட 78 படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மயிலிட்டி மீன்பிடி இறங்குதளங்த்தை பயன்படுத்தி வந்த இலங்கை மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் தமிழக மீனவர்களின் படகுகள் ஆண்டுக்கணக்காக ஒரே இடத்தில் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால் கடற்கரை மாசடைவதுடன் இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுவதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறையினரால் அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வந்தன. இதனடிப்படையில் சேதடைந்த படகுகளை அழிப்பதற்கு நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.

இந்நிலையில், மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் உடைத்து விறகுகளகாம், மரக்கட்டைகளாக்கும் பணிகளை அந்நாட்டு மீன்வளத்துறை தொடங்கி உள்ளது.

முன்னதாக இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு தலா ரூ.8 லட்சமும், நாட்டுப்படகுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *