‘இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!’ – இந்தியாவுக்கு எதிராக கெத்தாக களமிறங்கப் போகும் ஜிம்பாப்வே! |“After Defeating Sri Lanka, Tops the Points Table! – Confident Zimbabwe Set to Face India

Spread the love

சேஸிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு அதன் ஓப்பனர்களான பிரையன் பென்னர்ட் மருமணி ஆகியோர் இணைந்து 69 ரன்களை சேர்த்தனர். மருமணியை வெல்லாலகே வீழ்த்த நம்பர் 3 இல் ரியான் பர்ல் அதிரடியாக 12 பந்துகளில் 23 ரன்களை சேர்த்திருந்தார். நம்பர் 4 இல் சிக்கந்தர் ராசா அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 45 ரன்களை சேர்த்து வெற்றியை உறுதி செய்தார்.

ஜிம்பாப்வே இடம்பெற்றிருந்த க்ரூப் B இல் தான் ஆஸ்திரேலியாவும் இருந்தது. உலகக்கோப்பையை நடத்தும் இலங்கையும் இருந்தது. வழக்கமாக ஜிம்பாப்வே ஸ்பாய்லர்களை நிகழ்த்தும் அணியாக மட்டுமே பார்க்கப்படும். அவர்களின் வெற்றியெல்லாம் ஒன் டைம் வொண்டராக மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தடவை லீகில் 4 போட்டிகளில் மூன்றை வென்றிருக்கிறார்கள். அயர்லாந்துக்கு போட்டி மழையால் நடக்கவில்லை. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கிறார்கள். இலங்கையை வீழ்த்தியிருக்கிறார்கள். இது ஒரு ஸ்டேடமெண்ட். “எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்’ என நிரூபித்திருக்கிறார்கள். இந்தியா கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *