இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இலங்கை இடையே பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் நவீனமயமாக்கல் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 10 முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்ற பின் முதல்முறையாக இலங்கை அதிபர் திசநாயக்க கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வந்திருந்தார்.
இதனிடையே, கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை தற்போது மீண்டு வருகிறது. மேலும், 3 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது இந்திய அரசு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான நிதியுதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:கொலையுண்ட மனைவி உயிருடன் கண்டுபிடிப்பு! 3 ஆண்டுகள் கழித்து கணவர் விடுதலை!