உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு (63.33 புள்ளிகள் சதவீதம்) வந்துள்ளது. ஆஸ்திரேலியா (60.71) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட, இந்தியாவோ (57.29) மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது.
இலங்கை (45.45), இங்கிலாந்து (45.24), நியூஸிலாந்து (44.23), பாகிஸ்தான் (33.33), வங்கதேசம் (31.25), மேற்கிந்தியத் தீவுகள் (24.24) ஆகியவை முறையே 4 முதல் 9-ஆவது இடங்களில் உள்ளன. முன்னதாக, இந்த புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துடன் அடிலெய்ட் டெஸ்ட்டுக்கு வந்த இந்தியா, தற்போது 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடரில் எஞ்சியிருக்கும் 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே, இந்தியாவால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற முடியும்.