இலங்கையின் 9-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்தத் தோ்தல் முக்கியத்துவம் பெற்றது. தோ்தலில் மொத்தம் 38 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
எனினும் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி முன்னணி சாா்பில் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜேவிபி) கட்சித் தலைவா் அநுரகுமார திசாநாயக ஆகிய மூவருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.