இலவச சட்ட சேவை பெறும் உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால் எப்படி ? | Everyone has the right to free legal services. But how?

Spread the love

24×7 சட்ட உதவி மையங்கள்

மாண்புமிகு நீதியரசர் M. சுந்தர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முன்னாள் செயல்தலைவர் அவர்களின் முன்னெடுப்பில் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு (NALSA)- வின் பல்வேறு திட்டங்களின் கீழ் 24×7 மணி நேரமும் செயல்படும் சட்ட சேவை மையத்தை (Legal Services Clinics) சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவர் மாண்புமிகு நீதியரசர் சூர்யகாந்த் அவர்கள் கடந்த 23 ஆகஸ்ட் 2025 அன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.

சட்ட தன்னார்வ தொண்டர்கள்

சட்ட உதவி சேவைகள் கிராம மக்களுக்கும் எளிய முறையில் சென்றடைய சட்ட தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers) நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் மக்களுக்கு சட்ட தகவல்களை வழங்கி, தேவையுள்ளவர்களை சட்டப் பணிகள் ஆணைக்குழுவுடன் இணைக்கும் முக்கிய பாலமாக செயல்படுகின்றனர்.

சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் அமைப்பு Legal Aid Defense Counsel System (LADCS)

சிறைகளில் உள்ள கைதிகளுக்கும் சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. வழக்கு நிலை, ஜாமீன், மேல் முறையீடு, தண்டனை குறைப்பு போன்ற விவகாரங்களில் இலவச சட்ட ஆலோசனை வழங்கப்பட்டு, கைதிகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட சமூகத்தின் பலவீனப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் மற்றும் சிறைவாசிகளுக்கு தரமான இலவச சட்ட உதவி வழங்கும் புதிய முறையை மாண்புமிகு தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு “Legal Aid Defense Counsel System – சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் அமைப்பு” அதை தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் சோதனை முயற்சியாக இரண்டு வருடங்கள் செயல்படுத்தி பார்த்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் Legal Aid Defense Counsel System (LADCS)/சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் அமைப்பு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழக்கறிஞர்களை 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இது மிகச்சீரான, முழுநேர பாதுகாப்பு சேவை அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் முதல் நீதிமன்றத்தின் இறுதி நிலை வரை முழுமையான சட்ட உதவி வழங்குவதே இதன் நோக்கம். ஜாமீன், மேல்முறையீடு, விசாரணை, ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய அனைத்திற்கும் ஒரே குழு பொறுப்பேற்கும். இது வழக்குகளில் தகுதியான மற்றும் தரமான சட்ட உதவியை வழங்கி, நீதி, சமத்துவம் நிலைநிறுத்த உதவுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *