நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்த இல. கணேசன் மறைவைத் தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநருக்கு நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் இன்று(ஆக. 16) உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரும் பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(ஆக. 15) மாலை காலமானார்.
மறைந்த இல.கணேசனின் உடலுக்கு இல.கணேசன் உடலுக்கு 42 குண்டுகள் 3 முறை முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தியபின், சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் இன்று(ஆக. 16) தகனம் செய்யப்பட்டது.