இளம்பெண்களிடையே டிரெண்ட் ஆகும் 'Gel Nails'; பயன்படுத்தலாமா? சூப்பர் டிப்ஸ் இதோ!

Spread the love

ஃபேஷன் மற்றும் அழகு காரணங்களுக்காக இளம்பெண்களிடையே சமீபத்தில் டிரெண்டு ஆகி வருகிறது, ‘ஜெல் நகங்கள்’.

இந்த ஜெல் நகங்களைப் பயன்படுத்தலாமா… கூடாதா என்பதை விளக்குகிறார் சரும நோய் மற்றும் அழகுக்கலை நிபுணர் மருத்துவர் ப. ஆனந்த குமாரி.

“நெயில் பாலிஷிற்கு பதிலாக நகத்தை நீண்ட காலம் அழகுப்படுத்தி வைப்பதற்கான ஒன்று தான் ‘ஜெல் நகம்’.

சரும நோய் மற்றும் அழகுக் கலை நிபுணர் மருத்துவர் ப. ஆனந்த குமாரி
சரும நோய் மற்றும் அழகுக் கலை நிபுணர் மருத்துவர் ப. ஆனந்த குமாரி

மேற்கத்திய கலாச்சாரத்திற்கு ஒத்தது ஜெல் நகம். நான் இதைச் சொல்வதற்கான காரணம், ‘உணவு அருந்தும் பழக்கம்’. மேற்கத்தியர்கள் ஸ்பூனில் உணவை உண்பார்கள்.

ஆனால், பெரும்பாலும் நாம் கையில் தான் உணவை உண்போம்.

நாம் உணவு உண்ணும் நேரத்தில் உணவோடு கலந்து ஜெல் நகமும் வயிற்றிற்குள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால், வயிற்று வலி, வயிற்றில் புண் போன்றவை ஏற்படுவதற்கான அபாயங்கள் உண்டு.

அடுத்தது, பொதுவாகவே தோல், நகங்களில் ரசாயனங்களைப் பயன்படுத்துவது தவறு. ஜெல் நகத்திற்கு பதிலாக மருதாணியைப் பயன்படுத்தலாம்.

மருத்துவர்களே பரிந்துரைப்பார்கள்

மழைக்காலங்களிலும், நீரில் நின்று அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு மருத்துவர்களே ஜெல் நகத்தைப் பரிந்துரைப்பார்கள். இது பூஞ்சைத் தொற்றைத் தவிர்ப்பதற்கு ஆகும்.

ஆனால், இவர்களையும் ஜெல் நகத்தைக் காலில் மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கப்படும். மேலும், நகத்தில் மட்டுமல்லாமல், நகத்தைச் சுற்றி உள்ள தசைகளிலும் ஜெல் நகத்தை வைக்க சொல்வார்கள்.

இதன் மூலம், பூஞ்சைத் தொற்றைத் தடுக்கலாம்.

Gel Nails | ஜெல் நகம்
Gel Nails | ஜெல் நகம்

ஜெல் நகம் பயன்படுத்தவே கூடாதா?

ஜெல் நகத்தை வைக்கவே கூடாதா என்றால், வைக்கலாம். ஆனால், எப்போதாவது வைப்பது நல்லது. எப்போதுமே ஜெல் நகத்தைப் பயன்படுத்துவது நகத்திற்கு அபாயத்தைக் கூட விளைவிக்கலாம்.

ஜெல் நகத்திற்கு சின்ன டிப்ஸ் இதோ… ஒரு வாரம் ஜெல் நகம் வைத்திருந்தால், அடுத்த வாரம் அதை முழுமையாக நீக்கிவிட வேண்டும். அப்போது தான், நகத்திற்கு காற்றோட்டம் கிடைக்கும்.

ஏனெனில், உடலில் நகம், சதை போன்றவைகளும் சுவாசிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை, இந்த டிப்ஸைப் பயன்படுத்தவில்லை என்றால், நகம் அழுகவதற்கான அல்லது விழுவதற்கான வாய்ப்புகளும் உண்டு”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *