சுரேஷ் ரெய்னா சொல்வதென்ன?
நாளை மறுநாள் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், புதிய வீரர்கள் உருவாவதற்கு ஒவ்வொரு ஐபிஎல் சீசனும் வீரர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நிறைய இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். இந்திய அணி உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. நிறைய இளம் வீரர்கள் கேப்டன்களாக வளர்ந்துள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து வந்துள்ளனர். அவர்கள் மட்டுமின்றி அதிக அளவிலான வேகப் பந்துவீச்சாளர்கள், ஐபிஎல் தொடரிலிருந்து உருவாகியுள்ளனர்.