“இளையராஜாவிடம் கேட்டுவிட்டுதான் பயன்படுத்தினோம்” – மாஸ்க் படம் குறித்து கவின் | “We used it only after asking Ilayaraja” – Kavin on the film Mask

Spread the love

இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்க். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில், நடிகர்கள் கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சமீபத்தில் இளையராஜா நீதிமன்றத்தில் அவரின் பாடல், புகைப்படம், இசை போன்றவற்றை வியாபார நோக்கில் பயன்படுத்தக் கூடாது எனத் தடை உத்தரவு வாங்கியிருந்தார். ஆனால், மாஸ்க் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Andrea|ஆண்ட்ரியா

Andrea|ஆண்ட்ரியா

எனவே, அது தொடர்பாக இயக்குநர் விகர்ணனிடமும், நடிகர் கவினிடமும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கவின், “நாங்கள் அந்தப் பாடலை இளையராஜாவிடம் அனுமதி பெற்று, என்.ஓ.சி வாங்கிய பின்பே பயன்படுத்தினோம். அவரிடம் ஆசி பெற்றே படத்தைத் தொடங்கினோம்.

எங்கள் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை ஆண்ட்ரியா அவரின் வீட்டை அடமானம் வைத்துதான் இந்தப் படத்துக்கான முதலீட்டைச் செய்திருந்தார். படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதனால் அவரின் வீடும் பத்திரமாக இருக்கும் என நம்புகிறோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *