'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' – உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!

Spread the love

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி 97 ரன்களை குவித்து ஆட்டநாயகன் ஆகியிருக்கிறார் சாம்சன். அவரின் ஆட்டத்தால் இந்திய அணி உலகக்கோப்பையின் அரையிறுதிக்குள்ளும் நுழைந்திருக்கிறது. போட்டிக்குப் பிறகு அவர் பேசியவை

Samson
Samson

சாம்சன் பேசியதாவது, ‘கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்தே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடுதான் இருந்தேன். அந்தக் கனவுக்காக காத்திருந்த நாள் இதுதான்.

என்னுடைய பயணம் எப்போதும் தனிச்சிறப்பு கொண்டது. நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்தது. ‘என்னால முடியுமா? நான் இந்த இடத்துக்கு வர முடியுமா?’ன்னு என்னையே நான் சந்தேகப்பட்ட தருணங்களும் நிறைய இருந்திருக்கு. ஆனா நம்பிக்கையை விடல. இன்று எனக்கு ஆசீர்வாதம் தந்த கடவுளுக்கு நன்றி.

இந்த ஃபார்மாட்டை நான் நீண்ட காலமா விளையாடி வரேன். IPL இல் 10–12 வருஷமா விளையாடி இருக்கேன். இந்திய அணியில கடந்த 10 வருஷமா இருக்கேன். பல போட்டிகளில் விளையாடல, ஆனா டக்அவுட்-ல இருந்து பார்த்து நிறைய கத்துக்கிட்டேன்.

விராட் கோலி, ரோஹித் சர்மா மாதிரி பெரிய வீரர்கள் எப்படி விளையாடுறாங்க? எப்படி ஆட்டத்தை முடிக்கிறாங்க, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தங்கள் ஆட்டத்தை எப்படி மாற்றுறாங்கன்னு கவனிச்சு கத்துக்கிட்டேன்.

Samson
Samson

அது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு.

நான் நேரடியாக 50–60 போட்டிகள் தான் விளையாடி இருப்பேன். ஆனா 100க்கும் மேலான போட்டிகளை பார்த்திருக்கேன். இது என் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த நாட்களில் ஒன்று. பந்தை மட்டும் பார்த்தேன்,என்னோட திறமையை நம்பினேன். அவ்வளவுதான்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *