இந்தியா 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு மாபெரும் சக்தி. இஸ்ரேல் சிறிய நாடாக இருந்தாலும் செயலில் மாபெரும் சக்தி. இந்த கூட்டணிதான் இரு நாடுகளின் வலிமையையும் பன்மடங்கு பெருக்கும் காரணி. மேலும், உலக அரங்கில் யூதர்களுக்கு எதிரான போக்கு அதிகரித்து வரும் நிலையில், யூதர்களை ஒருபோதும் துன்புறுத்தாமல் அன்புடன் வரவேற்ற ஒரே நாகரிகம் இந்தியா தான் என்பதை இஸ்ரேல் ஒருபோதும் மறக்காது. இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் வலிமையாக இருக்கின்றன. உண்மையை உரக்கச் சொல்லி இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் ஒரு உலகத் தலைவர் மோடி.

ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான போர், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான தற்காப்புப் போர். காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக இஸ்ரேல் ஒரு பாதுகாப்புச் சுவராக இருப்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளதால்தான் ஆதரவளிக்கிறது. அக்டோபர் 7 அன்று நடந்த படுகொலைகள், ‘தீய சக்திகளின் அச்சை’ முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. அந்த சக்திகளை இஸ்ரேல் முறியடித்து வருகிறது. தீவிரவாத இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு எதிராக மிதவாதம், முன்னேற்றம், மனித கண்ணியம் மற்றும் பரஸ்பர மரியாதையை நம்பும் நாடுகளுடன் இணைந்து ஒரு ‘இரும்பு கூட்டணியை’ உருவாக்க விரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.