இந்த நிலையில், நேற்று இரவு நடந்த இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் லரிஜானி உயிரிழந்துள்ளார். இதை ஈரான் அரசாங்கமும் உறுதி செய்துள்ளது.
ஈரானை ஆளும் குண்டர் கும்பலான புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தலைவர் என்று லரிஜானியை முன்பு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டிருந்தார்.
ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் பொதுவெளியில் காணப்படுவதில்லை.
அவருக்குப் பதிலாக இதுவரை லரிஜானி தான் ஈரானின் குரலாக இருந்து வந்தார். மேலும், ஈரானின் உச்ச தலைவர் கொடுக்கும் ஆணைகளை நிறைவேற்றும் நபராகவும் இவர் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.