காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் ஒப்பந்தத்தையும் மீறி தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராஃபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனவரி 19 முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபின் இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை தற்போது நிகழ்த்தியுள்ளது.
இதேபோன்று சிரியா, லெபனானின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதன்மூலம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் போரைத் தொடங்கியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
பிணைக் கைதிகளை விடுவிக்க மறுப்பது மற்றும் அனைத்து போர்நிறுத்த திட்டங்களையும் நிராகரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஹமாஸ் படையினர் ஈடுபட்டதால், மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் அமைப்பு விதிகளை கடைபிடிக்கவில்லை என்றும், இதனால், கூடுதல் ராணுவப் படைகளுடன் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போராடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | உக்ரைன் – ரஷியா போர்: அமைதி ஏற்படுத்த விரும்புகிறார் டிரம்ப்!