“இஸ்லாமிய மக்களோட உணர்வை புரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கோம்.” – ஆர். கே. செல்வமணி | “We have not understood the feelings of the Islamic people.” – R. K. Selvamani

Spread the love

செல்வமணி பேசுகையில், “நான் நிறைய போலீஸ் கதைகள் எடுத்திருக்கேன். ஆனா, என்னுடைய படங்கள் கமர்ஷியலாக நகரும். இந்த ‘சிறை’ படத்தைப் பார்த்தப் பிறகு நான் இன்னும் என்னுடைய படங்கள்ல செய்திருக்கலாம்னு அவமானமாக இருக்கு.

நான் இப்போ படம் பண்ணினால்கூட இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் அளவுக்கு பண்ண முடியுமானு தெரில.” என்றவர், “நான் படம் பண்ணும்போது மன்சூர் அலிகான் என்கிட்ட ‘என்னுடைய பெயர் முஸ்லிம் பெயராக இருக்கு. மாத்தி வச்சிடலாமா அண்ணே’னு கேட்டாரு.

இந்த ‘சிறை’ திரைப்படம் இஸ்லாமியர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் படமாக இருக்கும்.

நிறைய சமயங்கள்ல அந்த மக்களோட உணர்வை புரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கோம். நான்கூட முஸ்லிம்களை வில்லனாக காமிச்சிருக்கேன். நாம் அப்படியே பார்த்து பழகியதுனால அப்படி வச்சிட்டேன்.

ஆனா, இந்த ‘சிறை’ படத்துல வர்ற ஒரு காட்சி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.

அந்தக் காட்சியைப் பார்க்கும்போது மதத்தின் பெயரால அரசியல் செய்றவங்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது.

இந்தப் படத்தை எப்படி சென்சார் செய்தாங்கனு யோசிக்க வைக்கிற அளவுக்கு படத்துல நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கு.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *