“இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவம் என மூன்றையும் நான் படித்திருக்கிறேன்!” – ஏ.ஆர். ரஹ்மான் |”I had studied Islam, Hinduism, Christianity!” – AR Rahman

Spread the love

அந்தப் பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான், “இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவம் என மூன்றையும் நான் படித்திருக்கிறேன். எனக்கு மதத்தின் பெயரால் உயிரைப் பறிப்பது, தீங்கு செய்வது மட்டும் பிரச்னை.

மக்களை எண்டர்டெயின் செய்வது எனக்குப் பிடிக்கும். நான் மேடையில் நின்று பாடும்போது அது ஒரு கோவில் போன்ற உணர்வை எனக்குத் தரும்.

அங்கே பல மதத்தவரும், பல மொழிகளில் பேசும் மக்களும் ஒன்றாக இணைந்து மகிழ்கிறார்கள்” என்றவர் சூஃபிசம் குறித்து, “நம்முள் உள்ள ஆசை, பேராசை, பொறாமை என அனைத்தும் மறைந்து போக வேண்டும்.

அப்போதுதான் அகங்காரம் அழிந்து, கடவுள் போல ஒரு தெளிவான நிலைக்கு நாம் வர முடியும்.

நாமெல்லாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றினாலும், அந்த நம்பிக்கையின் உண்மையான நேர்மையே முக்கியம். அதுதான் மனிதர்களை நல்ல செயல்களுக்கு இட்டுச் செல்கிறது” எனப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *