“இ.டி.க்கு மட்டுமல்ல… மோடிக்கே பயப்பட மாட்டோம்” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி | deputy cm udhayanidhi speech in pudukottai

1362859
Spread the love

புதுக்கோட்டை: எங்​களை மிரட்டி அடிபணிய வைக்க முடி​யாது. நாங்​கள் இ.டி. மட்​டுமல்ல, மோடியே வந்தாலும் பயப்பட மாட்டோம் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார்.

புதுக்​கோட்டை ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் அனைத்​துத் துறை பணி​கள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு பேசும்​போது, “அனைத்​துத் துறை அலு​வலர்​களும் பொது​மக்​களுக்​கும், அரசுக்​கும் பால​மாக இருந்​து, அரசின் திட்​டங்​களை மக்​களிடையே சென்​றடையச் செய்​து, அரசுக்கு நற்​பெயரை பெற்​றுத்தர வேண்​டும்” என கேட்​டுக் கொண்​டார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​துக்​கான நிதி உரிமை​யைப் பெறு​வதற்​காக டெல்​லி​யில் நடை​பெற்ற நிதி ஆயோக் கூட்​டத்​தில் தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கலந்​து​கொண்​டார். இதை அரசி​ய​லாக்​கு​வதற்​காக எதிர்க்​கட்​சி​யினர் விமர்​சித்து வரு​கின்​றனர்.

தமிழகத்​தில் அமலாக்​கத் துறை சோதனைக்கு பயந்து முதல்​வர் ஸ்டா​லின் டெல்லி சென்​ற​தாக​வும் கூறி​யுள்​ளனர். நாங்​கள் இ.டி. (அமலாக்​கத் துறை) மட்​டுமல்ல, மோடியே வந்தாலும் பயப்​பட​ மாட்​டோம். எங்​களை மிரட்டி அடிபணிய வைக்க பார்த்​தார்​கள். மிரட்டி அடி பணிய வைப்​ப​தற்கு திமுக ஒன்​றும் அடிமை கட்சி அல்ல.

கருணாநி​தி​யால் கட்​டிக் காக்​கப்​பட்ட, பெரி​யாரின் கொள்​கைகளைப் பின்​பற்​றக்​கூடிய சுயமரி​யாதைக் கட்சி திமுக. தவறு செய்​தவர்​கள்​தான் பயப்பட வேண்​டும். நாங்​கள் யாருக்​கும் அடிபணி​ய​வும் வேண்​டிய​தில்லை, பயப்​பட​வும் அவசி​யமில்​லை. எதை​யும் சட்டப்​பூர்​வ​மாக சந்​திப்​போம். இவ்​வாறு உதயநி​தி ஸ்டா​லின்​ கூறி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *