இந்தத் தம்பதியினர் மீண்டும் இணைவதற்கு இவர்களது பிள்ளைகளான நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சித்தார்த் ஆகியோர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். கடந்த 6 முதல் 8 மாதங்களுக்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள லிஸியின் ஸ்டுடியோவிற்கு நடிகர் மம்மூட்டி நேரில் வந்து, இந்த தம்பதியினரைச் சந்தித்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பிரியதர்ஷன் தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் “பூத் பங்களா’ என்ற பட வேலையில் பரபரப்பாக இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.