ஈடன் கார்டன் திடலின் பி பிளாக் அரங்குக்கு ஜுலான் கோஸ்வாமியின் பெயரை சூட்டவிருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி 22ஆம் தேதி இந்திய மகளிர்- இங்கிலாந்து மகளிர்க்கு எதிராக முதல் டி20 போட்டியின்போது இந்த அரங்கம் திறக்கப்படவிருக்கிறது.
20 ஆண்டுகாலமாக மகளிர் கிரிக்கெட்டில் அசத்திய ஜுலான் கோஸ்வாமி மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (255) எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். ஓய்வு பெற்ற பிறகும் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
12 டெஸ்ட், 204 ஒருநாள், 68 டி20 போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.