பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை நான்கு வெண்கலப் பதக்கங்களை மட்டுமே பெற்றுள்ளது. நேற்று நடந்த ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது.
இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இதில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அவர் அதிகபட்சமாக ஈட்டியை 89.45 மீட்டர் எறிந்தார்.
பாகிஸ்தான் வீரர் நதீம் 92.97 மீட்டர் எறிந்து ஒலிம்பிக்கில் புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார். கிரெனடா வீரர் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் வீசி வெண்கல பதக்கம் வென்றார்.
ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற முதல் வெள்ளிப் பதக்கம் இது என்பது குறிப்பிட த்தக்கது.